'பிக்பாஸ்' வனிதா உடைமாற்ற விஜய் செய்த உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய வனிதா விஜய்குமார், பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரமே வெளியே வருவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய கத்தல், அடுத்தவர் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடுவது, சின்ன பிரச்சனையை பெரிதாக்குவது ஆகியவற்றால் அவரை மக்கள் வெறுக்க தொடங்கியதால் அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா அளித்த பேட்டி ஒன்றில், தான் பிறந்ததில் இருந்தே வசதியாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க வந்ததும் சில பிரச்சனைகள் தனக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக விஜய் நடித்த 'சந்திரலேகா' படத்தின் படப்பிடிப்பு ஒரு கிராமத்தில் நடந்ததால் அங்கு தங்குவதற்கு ஸ்டார் ஒட்டல் இல்லை என்றும், அதனால் குறைந்த வசதிகள் கொண்ட வீடு ஒன்றில் தங்கியதாகவும் குறிப்பிட்ட வனிதா, படப்பிடிப்பின்போது உடைமாற்றும் வசதி கூட இல்லாததால் தான் கஷ்டப்பட்ட அனுபவத்தை தெரிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் உடை மாற்ற கூட வசதியில்லாமல் வெட்ட வெளியில் உடைமாற்றும் நிலை ஏற்பட்டதால் தான் தயங்கி நின்றதாகவும், அதனை புரிந்து கொண்ட விஜய், தன்னுடைய காஸ்ட்லி காரின் சாவியை கொடுத்து உடைமாற்ற தனது காரை பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியதையும் வனிதா நினைவு கூர்ந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout