'விடாமுயற்சி' படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொள்வது எப்போது? சுரேஷ் சந்திரா தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,June 23 2024]

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் விரைவில் த்ரிஷா மற்றும் அர்ஜூன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 'விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் அதன் பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்காத நிலையில் தான் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்று அஜித், ஆரவ் உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’ஜூன் 22 முதல் 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்றும், இந்த படப்பிடிப்பில் அடுத்த வாரம் த்ரிஷா கலந்து கொள்வார் என்றும் அதேபோல் இன்னும் சில நாட்களில் அர்ஜுன் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூலை 22ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதம் 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர் மீண்டும் ஹைதராபாத்தில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹைதராபாத் படப்பிடிப்புடன் முற்றிலும் 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாவது உறுதி என்றும் அந்த பேட்டியில் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

பாலிவுட்டில் என்ட்ரி ஆகும் சமந்தா.. முதல் படமே மாஸ் நடிகருக்கு ஜோடியா?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா பாலிவுட்டில் என்ட்ரி ஆக போவதாகவும் முதல் படமே அவர் மாஸ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சோனியா அகர்வால் நடித்த 7G ரிலீஸ் தேதி அறிவிப்பு..ஹாரர் த்ரில்லர் படம்..!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாரூன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும்

இன்று சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10  இறுதிப்போட்டி: டைட்டில் பட்டம் யாருக்கு?

தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 9 சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய

ஒரே படத்திற்கு 5 முறை டப்பிங் பேசிய கமல்ஹாசன்.. இப்படி ஒரு நடிகர் யாராவது உண்டா?

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரே படத்திற்கு ஐந்து முறை டப்பிங் பேசியதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து 'இப்படி ஒரு நடிகர் யாராவது உண்டா' என கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'கோட்' படத்தை அடுத்து இன்னொரு படத்திலும் ஏஐ விஜயகாந்த்.. இன்று முதல் பணிகள் ஆரம்பம்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் வருகிறார் என்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.