கொரோனா பாதித்தவர்களுக்கு தடுப்பூசி? வெளியான முக்கிய அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு 3 மாதம் கழித்து தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. முன்னதாக 6 மாதம் கழித்து கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்து இருந்ததை அடுத்து மத்தியச் சுகாதாரம் அமைச்சகம் தற்போது 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு இயல்பாகவே அந்நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் அவர்களின் உடலில் இருக்கும் என நம்பப்பட்டாலும் ஒருமுறை கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் வருவது தற்போது அதிகரித்து உள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் ஆன்டிபாடிகளின் அளவு குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தேவை எனக் கருதப்படுகிறது.

மேலும் மிதமான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் குறைவாகக் கொடுக்கப்பட்டு  இருக்கும். இவர்களை கொரோனா நோய்த்தொற்று மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே 6 மாதம் கழித்துப் போடுவது சரியாக இருக்காது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகள் மற்றும் இணை நோய் கொண்டவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு வெட்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கும். அதோடு ஸ்டீராய்டு போன்ற மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். எனவே தீவிரக் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மிகவும் அவசியம்.

இதுபோன்ற காரணங்களால் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு 3 மாதம் கழித்து தடுப்பூசி செலுத்தப்படும். அதோடு ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பின்பு ஒருவேளை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களும் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அதேபோல பாலூட்டும் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்றும் மத்தியச் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்து இருக்கிறது. ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

More News

பாம்பு டான்ஸ் ஆடிய இளைஞர்கள்: புதுவகை தண்டனை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று? எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 5 நோயாளிகள்

பிரபல சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று 'பாக்கியலட்சுமி' என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவி

நான் நடிச்ச காமெடி இப்ப உலகத்துக்கே பொருந்துதே: கொரோனா குறித்து வடிவேலு

நான் நடித்த காமெடி ஒன்று தற்போது உலகத்துக்கே பொருந்தி வருவதாக நடிகர் வடிவேலு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புளூசட்டை மாறனின் 'ஆண்டி இந்தியன்' படத்திற்கு இத்தனை 'கட்'களா? 

யூடியூபில் சினிமா திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்யும் புளூசட்டை மாறன் என்பவர் இயக்கிய 'ஆண்டி இந்தியன்' என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ்