close
Choose your channels

தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்புக்கு மறுப்பு தெரிவித்தாரா தாணு?

Friday, August 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் படப்பிடிப்புக்கு தயாராக இருந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் படப்பிடிப்பு வேண்டாம் என மறுத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’கர்ணன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் காலையில் ’கர்ணன்’ படத்திலும் இரவு செல்வராகவன் படத்திலும் நடிக்க தனுஷ் திட்டமிட்டதாக தெரிகிறது.

இந்த இரண்டு படத்தையும் கலைப்புலி எஸ் தாணு அவர்களே தயாரித்து வருகிறார் என்பதால் அவரிடம் இது குறித்து தனுஷ் பேசியதாகவும் ஆனால் கலைப்புலி தாணு அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

காலை முதல் மாலை வரை ’கர்ணன்’ படத்திலும் இரவு முதல் அதிகாலை வரை செல்வராகவன் படத்தில் நடித்தால் தனுஷ் உடல்நிலை பாதிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி அவரது முகம் சோர்வாக இரண்டு படத்திலும் எதிரொலிக்கும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. தனது உடல் நலனை கருத்தில் கொண்டு தாணு அவர்கள் கூறியதை தனுஷ் ஏற்றுக் கொண்டதாகவும் அதனை அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் ஐடியாவை தனுஷ் கைவிட்டதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment