close
Choose your channels

ரஜினியின் '2.0' படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?

Friday, February 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் பொங்கல், ஜனவரி 26, ஏப்ரல் என மாறி மாறி அதன் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

தற்போது ரஜினியின் 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் 2.0 ஏப்ரலிலும் ரிலீஸ் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலின்படி இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அல்லது செப்டம்பரில் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பல இடங்களில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதும், கிராப்பிக்ஸ் பணிகளின் தாமதமே இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கும் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தாமதமாக வந்தாலும் இந்திய சினிமாவில் மறக்க முடியாத வகையில் ஒரு சாதனைப்படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி என்று நம்பப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment