சசிகலா கணவர் நடராஜன் சரண் அடைவது எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
வெளிநாட்டிலிருந்து சொகுசு காரை இறக்குமதி செய்த சசிகலாவின் கணவர் நடராஜன் அதன்மூலம் ரூ.1.84 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில் அவர் எப்போது சரண் அடைய வேண்டும் என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:
நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தின் முன் இன்றுக்குள் சரண் அடைய வேண்டும். இருப்பினும் அவருக்கு மூன்று ஆப்சன்கள் உள்ளன. ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து பெயில் கேட்க வேண்டும், ஆனால் பெயில் கிடைக்கும் வரை சிறையில் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக தன்னுடைய மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து தனது தண்டனையை நீக்க அவர் கோரிக்கை வைக்கலாம். இதற்கு கவர்னர் மற்றும் குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கவர்னர் அல்லது குடியரசு தலைவர் முடிவெடுக்கும் வரை அவர் சிறையில் இருந்துதான் ஆக வேண்டும்
மூன்றாவதாக உடல்நிலையை கருத்தில் கொண்டு சரணடைய ஒருவாரம் அல்லது இரண்டு வாரம் அனுமதி கேட்கலாம். அதே நேரத்தில் இந்த அனுமதி மாதக்கணக்கில் கேட்க அனுமதி கிடையாது. இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடராஜன் சற்றுமுன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout