அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் எப்படி? தமிழக அரசு தகவல்
- IndiaGlitz, [Tuesday,November 29 2016]
மத்திய அரசு அறிவித்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 20 நாட்களை கடந்துவிட்ட போதிலும் இன்னும் ஏடிஎம் வாசலில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
இந்நிலையில் இந்த மாதம் அரசு ஊழியர்களின் சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது என்ற செய்தி வெளியாகியது. இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஆகியோர்களுக்கு இம்மாத சம்பளம் அவரவர்களின் வங்கி கணக்கில் நாளை அதாவது நவம்பர் 30ஆம் தேதி செலுத்தப்படும் என்றும் அந்த பணத்தை அன்றைய தினமே அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வாரம் ரூ.24000 மட்டுமே எடுக்க முடியும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் தங்கள் மொத்த சம்பளத்தையும் ஒரே நாளில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.