ரஜினியை அடிக்க தயங்கினேன். ஆனந்தராஜின் அதிர்ச்சி அனுபவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் 22 வருடங்களுக்கு பின்னர் சமீபத்தில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆனபோது புதிய ரிலீஸ் படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் மறக்க முடியாத இரண்டு காட்சிகள், தங்கைக்கு மெடிக்கல் காலேஜ் சீட் வாங்குவது, மற்றும் 'உள்ளே போ' என ரஜினி ஆக்ரோஷமாக கூறும் காட்சி. இன்று வரை தமிழ் சினிமாவில் இந்த இரண்டு காட்சிகளுக்கு இணையான காட்சி எந்த படத்திலும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் ஆனந்த்ராஜ், 'பல வருடங்களுக்கு முன்னர் ரஜினியின் உதவியாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் அவரை பார்க்க சென்றிருந்தபோது அவர் நடித்து வரும் 'பாட்ஷா' படத்தில் தனக்கு ஒரு ரோல் இருப்பதாக கூறினார். ஏற்கனவே இந்த படத்தில் ரகுவரன், சரண்ராஜ் ஆகிய இருவர் இருக்கும்போது எனக்கு என்ன கேரக்டர் இருக்கப்போகிறது என்று சந்தேகத்துடன் பார்த்தேன்.
ஆனால் என்னுடைய கேரக்டரை ரஜினி கூறிவிட்டு தன்னை அடிக்கும் கேரக்டர் என்றும் கூறினார். ரஜினியை அடிக்கும் கேரக்டர் என்றவுடன் நான் முதலில் தயங்கினேன். ஆனால் ரஜினி கொடுத்த ஆதரவான வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சி எனக்கு மட்டுமே பேர் வாங்கும் காட்சி என்பதால் மிகவும் நம்பிக்கையுடன் நடித்தேன்.
இத்தனை வருடங்கள் கழித்து இன்றும் இந்த படத்திற்கு இருக்கும் வரவேற்பை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் இந்த படத்தை டிஜிட்டலில் ரஜினி ரசிகர்களுடன் பார்த்த அனுபவம் விவரிக்க முடியாத அளவில் இருந்தது' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments