முதல் நாளே ஐஸ்வர்யா தத்தா முன் முட்டி போட்ட மகத்!

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மகத் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து நடிக்கவுள்ள படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அறிமுக இயக்குனர் பிரபு இயக்கவுள்ள இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்றது

முதல் நாள் படப்பிடிப்பில் ஐஸ்வர்யாவிடம் மகத் தனது காதலை சொல்லும் காட்சி படமாக்கப்பட்டது. கையில் ஒரு பூவுடன் ஐஸ்வர்யாவின் முன் முட்டி போட்டு காதலை புரபோஸ் செய்யும் காட்சியில் மகத் நடித்தார். ஆனால் இயக்குனருக்கு அந்த காட்சி திருப்தி இல்லாததால் மீண்டும் மீண்டும் டேக் எடுக்கப்பட, 'முதல் நாளே முட்டி போட வச்சிட்டேனா' என்று இயக்குனர் மகத்திடம் கேட்க ஐஸ்வர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அந்த ஜோக்கை கேட்டு சிரித்தனர். அதன்பின் ஐஸ்வர்யா, 'நான் வசனத்தை மறந்துடுவேன், சீக்கிரம் இந்த காட்சியை முடிங்க' என்று இயக்குனரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த காட்சி கடைசி வரை இயக்குனருக்கு திருப்தி தராததால் வேறு காட்சி படமாக்கப்பட்டது.

இந்த படப்பிடிப்பில் மகத், ஐஸ்வர்யாவுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரனும் இணைந்து நடித்துள்ளார். அவருடைய காமெடி காட்சி இந்த படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது.