தை அமாவாசை 2024 : திதி கொடுக்க சிறந்த நேரம் எப்போது? தர்பணங்களை யாரெல்லாம் செலுத்த வேண்டும் ? தை அமாவாசைக்கு ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தை அமாவாசை. மற்ற அமாவாசை நாட்களில் மூதாதையர்கள் வழிபாட்டை தவறவிட்டவர்களும், இந்த தை அமாவாசை அன்று மூதாதையர்கள் வழிபாட்டை செய்யும் போது, திதி தர்ப்பணம் கொடுக்கும் போது, தவறவிட்ட அமாவாசை திதியில், மூதாதையர்களை வழிபாடு செய்த பலனை சேர்த்து பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை இதெல்லாம் சிறப்பு வாய்ந்த அமாவாசை திதிகள்.
தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்!
தை அமாவாசையானது இந்த ஆண்டில் பிப்ரவரி 09ஆம் தேதி 2024 அன்று வெள்ளிக்கிழமை வருகிறது.
காலை 8:05 மணிக்கு அமாவாசை திதி பிறக்கவிருக்கின்றது. அதனால்
திதி கொடுக்க நல்ல நேரம் காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் கொடுக்கலாம்.இதைத் தொடர்ந்து வீட்டில் மதியம் 12:00 மணிக்கு, மறைந்த மூதாதையர்களுக்கு இலை போட்டு படையல் போட்டு வழிபாடு செய்யலாம்.
தை அமாவாசையில் ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் ?
தை அமாவாசை தினம் கட்டாயம் எல்லோரும் மூதாதையர்கள் வழிபாட்டை செய்ய வேண்டும். மூதாதையர்கள் வழிபாட்டை செய்வதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கும் பித்ரு தோஷம் விலகும். சுப காரியத்தடை நீங்கும் மூதாதையர்களின் ஆசிககள் கிடைக்கும். பல ஜென்மங்களாக நம்மை பின் தொடரும் சாபங்கள் விலகும்.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments