'இந்தியன் 2' படப்பிடிப்பில் மீண்டும் சிக்கல்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த ’இந்தியன் 2’படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் மீண்டும் எப்போது ’இந்தியன் 2’படப்பிடிப்பு தொடங்கும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. ’இந்தியன் 2’ விபத்து குறித்து கமல்ஹாசன் லைக்கா நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதியதும் அந்த கடிதத்துக்கு லைக்கா நிறுவனம் பதில் கடிதம் எழுதிய விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தான் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தாமதம் என்று கூறப்படுகிறது.

இரு தரப்பினர்களும் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதில் கூட பிரச்சனை இல்லை அதை பொதுவெளியில் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டது தான் பிரச்சனை பெரிதாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

மேலும் ’இந்தியன் 2’படத்திற்காக அனைத்து நட்சத்திரங்களிடமும் வாங்கி வைத்திருந்த கால்சீட் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தற்போது மீண்டும் முதலில் இருந்து அனைத்து நடிகர், நடிகைகளின் கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பை தொடங்குவதற்கு கால தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவரும் காவல்துறையினர் அவ்வப்போது படக்குழுவினர்களை அழைத்து விசாரணை செய்து கொண்டிருப்பதும் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகிறது என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் ’இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? என்பது குறித்த தகவல் படக்குழுவினர்களுக்கே இன்னும் தெரியவில்லை என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது