இந்திரா காந்தியை பிடல் காஸ்ட்ரோ கட்டிப் பிடித்தது ஏன்? சுவாரஸ்ய தகவல்

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற்றதோடு, கியூபா நாட்டு மக்களுக்கு வாழும் கடவுளாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார் என்ற செய்தியை பார்த்தோம். இந்நிலையில் கடந்த 1983ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்திருந்த பிடல் கோஸ்ட்ரோ அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியை கட்டிப்பிடித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் பின்னணியை தற்போது பார்ப்போம்
கடந்த 1983ல் டெல்லியில் நடந்த அணி சேரா நாடுகள் மாநாடு நடந்தது. இதன் தலைவரான பிடல் கோஸ்ட்ரா இந்த மாநாட்டை இந்தியா தான் நடத்த வேண்டும் என்று விரும்பினார். மேலும் இந்த அமைப்பின் தலைவர் பதவியை அவர் அடுத்ததாக இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க இருந்தார்.
மிகக்குறுகிய காலத்திற்குள் 140 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருந்த இந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டை மிகச்சிறப்பாக இந்தியா நடத்தியது. இதற்கு பாராட்டு தெரிவித்த பிடல் காஸ்ட்ரோ, இந்த பதவியை எனது தங்கைக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து இருந்தார்
இந்த மாநாட்டின் இறுதியில் இந்திராவிடம் பதவியை ஒப்படைக்கும்போது சகோதர பாசத்துடன் அவரை கட்டிப்பிடித்தார். இந்த காட்சியை உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகள் படம்பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்திரா காந்திக்கு சகோதரர் போல் இருந்த பிடல் காஸ்ட்ரோவின் மறைவு அனைத்து இந்தியர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள்

நடிகர் சங்க 63வது பொதுக்குழு நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

2.0 படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கும் உடல்நலக்குறைவா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய ரூபாய் நோட்டாக வரதட்சணை கொடுக்காததால் நின்று போன திருமணம்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பலவித குழப்பங்கள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

638 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிடல் காஸ்ட்ரோ

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கியூபா மக்களின் அன்புக்குரியவரும், சேகுவாராவின் உயிர் தோழருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.