67 ரன்னில் சுருண்டும் நடந்த அதிசயம்... 3ஆவது டெஸ்ட் தொடர் பற்றிய வைரல் கதை!
- IndiaGlitz, [Thursday,August 26 2021] Sports News
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 3 ஆவது டெஸ்ட் தொடர்போட்டியில் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஆனால் இதே கிரவுண்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த நெட்டிசன்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடர் போட்டியில் இங்கிலாந்து இப்படித்தான் படு சொதப்பலாக விளையாடி வெறும் 67 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் பின்னர் சுதாரித்துக் கொண்ட இங்கிலாந்து அணியினர் அபார வெற்றிப்பெற்றனர் என்று நெகிழ்ச்சி கதையொன்றை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இருந்த இந்தியாவை மழைவந்து கெடுத்துவிட்டது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி அபாரமாகக் கைப்பற்றியது. நேற்று 3 ஆவது டெஸ்ட் தொடர்போட்டி ஹேடிங்லே மைதானத்தில் துவங்கியது. ஆனால் ஆட்டம் துவங்கிய அரைநாளில் இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது.
அதற்குப்பின் விளையாடத் துவங்கிய இங்கிலாந்து அணியினர் 120 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். அதோடு இந்தப் போட்டியில் இங்கிலாந்து பவுலர்களின் பந்து வீச்சும் படு பயங்கரமாகவே இருந்தது. இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்று இந்திய வீரர்களை இங்கிலாந்து பவுலர்கள் திணற வைத்துள்ளனர்.
இதையடுத்து ஆஷஸ் தொடர்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 67 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து வீரர்கள் பின்னர் வெறித்தனமாக விளையாடி வெற்றிப்பெற்றனர். இந்தச் சம்பவம் தற்போது நெட்டிசன்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆஷஸ் தொடரில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 179 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 67 ரன்களுக்கு சுருண்டனர். இதனால் 112 ரன் முன்னிலையில் மீண்டும் ஆஸ்திரேலியா விளையாட துவங்கி 246 ரன்களை எடுத்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் 359 ரன்கள் எடுத்தால்தான் வெற்றிப்பெற முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து அணியினர் கலக்கத்துடன் விளையாடி வந்தனர். இதில் இங்கிலாந்து 4 ஆவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தாகூம் கடைசி விக்கெட்டை இழக்காமல் 363/9 என்ற ரன் கணக்கில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது. இந்த வெற்றிக்கு பென் ஸ்டொக்ஸ் மற்றும் ஜோ ரூட்ஸ் ஆகிய இருவரின் அபாரத் திறமையே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் போட்டியின் 4 ஆவது இன்னிங்ஸில் வெறித்தனமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 135 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜோ ரூட்ஸ் 80 ரன்கள் வரை எடுத்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிச்செய்தார். இந்த வெற்றிக்கதை தற்போது இந்திய அணிக்கும் பலிக்குமா என்ற ஆர்வத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.