எலான் மஸ்க்கையே அலறவிட்ட 19 வயது மாணவன்… என்ன செய்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
Space X மற்றும் டெஸ்லாவின் நிறுவனரும் அதன் செயல் தலைவருமான எலான் மஸ்கையே ஒரு டிவிட்டர் கணக்கை வைத்து 19 வயது மாணவர் ஒருவர் பயமுறுத்திய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மேலும் இதுகுறித்த டிவிட்டர் கணக்கை நீக்குவதற்கு எலான் மஸ்க் அந்த மாணவருக்கு 5,000 டாலர்கள் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜாக் ஸ்வீனி எனும் 19 வயது பல்கலக்கழக மாணவர், ஒரு டிவிட்டர் கணக்கை உருவாக்கி அதில் உலக அளவில் அசுர வளர்ச்சியடைந்து இருக்கும் எலான் மஸ்க் எங்கெல்லாம் பயணம் செய்கிறார், அவர் எந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்கிறார்? என்பது போன்ற தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். எலான் மஸ்க் மட்டுமல்ல இதேபோல அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஜ், பில்கேட்ஸ் உள்ளிட்ட 15 பிரபலங்களில் பயண விவரங்களையும் டிவிட்டரில் பதிவிடுவதற்கு 15க்கும் மேற்பட்ட பாட் கணக்குகளை அந்த மாணவர் உருவாக்கிள்ளார். இந்தக் கணக்குகளுக்கு ஏராளமான பாலோயர்களும் இருந்து வருகின்றனர்.
விமானத்துறையில் பணியாற்றிய தனது தந்தையிடம் இருந்து கிடைத்த அறிவைக்கொண்டு 19 வயது மாணவர் செய்த இந்தக் காரியத்தைப் பார்த்து பதறிய எலான் மஸ்க், இது எனது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி விடும், இத்தகைய தகவல்களை குறைத்துக் கொள்ள முடியுமா? ஜாக் ஸ்வீனியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இவரது கோரிக்கைக்கு பதிலளித்த அந்த மாணவர், “ஆமாம் என்னால் முடியும் ஆனால் அது உங்களுக்கு ஒரு மாடல் 3 செலவாகுமே“ எனப் பதிலளித்து எலான் மஸ்கிடம் பேரம் பேசியுள்ளார்.
அதாவது டெஸ்லா நிறுவனம் உருவாக்கிவரும் ஒரு காரின் விலையை தனக்கு லஞ்சமாகக் கேட்டுள்ளார் அந்த மாணவர். டெஸ்லா நிறுவனம் உருவாக்கும் 3 மாடல்கள் கார்கள் தற்போது 50 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவருடன் டிவிட்டரில் உரையாடிய எலான் மஸ்க் “மறைகழன்ற மனிதர்களின் கையால் நான் இறக்க விரும்பவில்லை“ எனவே 5,000 டாலர்கள் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் உலக அளவில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments