தோனியும் அஸ்வினும்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் காணொளி

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

தல தோனி ஒரு மேட்ச் ஃபினிஷர் என்பதும் தோல்வி அடையும் நிலையில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பதட்டமின்றி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இந்திய அணிக்கு இருந்தது. தோனியும், அஸ்வினும் களத்தில் இருந்தனர்.

முதல் பந்தில் அஸ்வின் ரன் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் அஸ்வின் ஒருரன் எடுத்ததால் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தின் பார்வையும் தோனியின் பக்கம் இருந்தது. 4 பந்துகளில் 12 ரன்கள் என்ற நிலையில் தோனி ஒரு சிக்ஸ் அடிக்க 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.

பின்னர் நோபாலில் இரண்டு ரன்கள் அதற்கு அடுத்த பந்தில் மூன்று ரன்கள் எடுத்து 2 பந்து மீதமிருக்கும்போதே இந்திய அணி வெற்றி பெற்றது. தோனி ஒரு மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷிர் என்பதற்கு உதாரணமாக இந்த போட்டியும்  இருந்தது.

 

More News

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனும் உடந்தை

தர்மபுரி அருகே ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டிய கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினியின் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த 6 வார கால இன்று முடிவடையும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட வார்னர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஒரே நேரத்தில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இளம் நடிகை

'பிரேமம்' படம் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தின் வெற்றியால் தனது டாக்டர் தொழிலை கூட கைவிட்டு முழுநேர நடிகையாகிவிட்டார்.

வேலைநிறுத்தம் எப்போது முடியும்? விஷால் விளக்கம்

தமிழ் திரையுலகில் வரலாறு காணாத வகையில் ஒரு மாதம் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுத்தம் வரை