தோனியும் அஸ்வினும்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் காணொளி
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனி ஒரு மேட்ச் ஃபினிஷர் என்பதும் தோல்வி அடையும் நிலையில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பதட்டமின்றி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இந்திய அணிக்கு இருந்தது. தோனியும், அஸ்வினும் களத்தில் இருந்தனர்.
முதல் பந்தில் அஸ்வின் ரன் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் அஸ்வின் ஒருரன் எடுத்ததால் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தின் பார்வையும் தோனியின் பக்கம் இருந்தது. 4 பந்துகளில் 12 ரன்கள் என்ற நிலையில் தோனி ஒரு சிக்ஸ் அடிக்க 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.
பின்னர் நோபாலில் இரண்டு ரன்கள் அதற்கு அடுத்த பந்தில் மூன்று ரன்கள் எடுத்து 2 பந்து மீதமிருக்கும்போதே இந்திய அணி வெற்றி பெற்றது. தோனி ஒரு மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷிர் என்பதற்கு உதாரணமாக இந்த போட்டியும் இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments