8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Sunday,March 29 2020]
கொரோனா வைரஸ் எப்போது அழியும் என 8 மாதத்துக்கு முன்பே கொரோனா வைரசை கணித்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளதை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
8 மாதத்திற்கு முன்பே உலகம் முழுவதும் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்படும் என்றும் அந்த நோய் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் வரை உலகையே ஆட்டிப்படைக்கும் என்றும் 14 வயது சிறுவனும் ஜொதிடருமான அபிக்யா ஆனந்த் என்பவர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜோதிடம் குறித்தும் கிரகங்கள் குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார் என்பதும் இவர் கூறியது பெரும்பாலும் உண்மையாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நெருக்கடியான நிலை இருக்கும் என்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே இவர் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.
இந்த நிலையில் வரும் மே மாதம் 29 ஆம் தேதி இந்தப் பிரச்சினை சரியாகி விடும் என்றும் அதன் பின்னர் உலக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்றும் அபிக்யா ஆன்ந்த் தற்போது கூறியுள்ளார் ஒரே நேரத்தில் செவ்வாய் சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் கூடுவதால் இந்த இந்த பாதிப்பு பூமிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து மே 29-ஆம் தேதி முழுமையாக நீங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.