தமிழகத்தில் 2வது அலை எப்போது? மருத்துவ நிபுணர் குழு பேட்டி
- IndiaGlitz, [Monday,June 15 2020]
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் ஆலோசனை செய்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆலோசனைக் குழுவில் அமைச்சர்கள் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த ஆலோசனைக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில் முதல்வருடன் ஆலோசனை செய்த மருத்துவர் குழுவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தில் இருப்பதாகவும் தமிழகத்தின் முதல் அலை தான் வீசுவதாகவும் சீனாவைப் போல் மூன்று மாதம் மூன்று மாதங்கள் கழித்து தமிழகத்தில் இரண்டாவது அலை ஏற்படலாம் என்று முதல்வரிடம் தெரிவித்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்
மேலும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிகளை கடுமைப்படுத்த முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர். கொரோனாவைரஸ் தொற்று உச்சத்தை எட்டிய பின்னரே படிப்படியாக குறையும் என முதல்வரிடம் தெரிவித்ததாகவும் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டி உள்ளதால் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும் என்றும் முதல்வரிடம் தாங்கள் தெரிவித்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
இதனை அடுத்து சென்னையில் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்