'சந்திரமுகி 2' படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Sunday,July 18 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், பி வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் உருவான திரைப்படம் ‘சந்திரமுகி’. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் இந்த படம் சென்னையில் ஒரே திரையரங்கில் மூன்று வருடங்கள் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி வந்தது என்பதும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், பி வாசு இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2022ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் பி வாசு இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சந்திரமுகி படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்த வேட்டையன் என்ற கேரக்டரின் முழு வடிவம் தான் ‘சந்திரமுகி 2’ என்று கூறப்படுகிறது

More News

அடுத்தடுத்து தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகிகள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் தற்போது தனுஷின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும், கார்த்திக் நரென் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது

வேற்று கிரகவாசிகள் தங்கும் Area 51- அமெரிக்காவில் நீடிக்கும் மர்மம் என்ன?

அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான Area 51 எனும் இடத்தைப்பற்றி பல சுவாரசியத் தகவல்கள் ஊடகங்களில் அவ்வபோது வெளியாகி வருகின்றன.

ரௌத்திரம் கொண்டு திமிரும் காளை....!சூர்யா பர்த்டே "காமன் டிபி" வெளியானது.....!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் காமன் டிபி இன்று வெளியானது. இதை நடிகர் ஆர்யா உட்பட பல திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய நேஷினல் கிரஷ்.....! எதில் தெரியுமா....?

பல பிரபல முன்னணி, நடிகைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் நேஷினல் கிரஷ்-ஆன ராஷ்மிகா மந்தானா.

ஷங்கர்-ராம்சரண் படத்தில் இணைந்த 'பீஸ்ட்' பிரபலம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் பணிபுரிந்து வரும் தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் ஷங்கர் - ராம்சரன் படத்தில் இணைந்து உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.