தண்ணீர் பாட்டில் ரூ.50க்கு விற்றால் எப்படி ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க! லிவிங்ஸ்டன்

  • IndiaGlitz, [Wednesday,May 03 2017]

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் எழில் இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நாயகி ரெஜினாவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன், தற்போதைய திரையரங்கு நிலவரம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:

'நான் எல்லா படங்களையும் தியேட்டரில் சென்றுதான் பார்ப்பேன். இதுவரை எந்த படத்தையும் டிவிடியில் பார்த்ததில்லை. ஆனால் அதே நேரத்தில் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் ரூ.1500 செலவு ஆகிறது. இது எப்படி எல்லோருக்கும் சாத்தியம் ஆகும்?

தியேட்டரில் ஒரு பப்ஸ் ரூ.80க்கும், ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் ரூ.50க்கும் விற்பனை செய்கின்றனர்.இப்படி இருந்தால் நடுத்தர வர்க்க மக்கள் எப்படி தியேட்டருக்கு வருவார்கள்? எனவே ரூ.400 அல்லது ரூ.500க்குள் ஒரு குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் அனைவருமே தியேட்டருக்கு படம் பார்ப்பார்கள். அனைத்து படங்களும் 70,80,90களில் ஓடியது போன்று 50 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடும்' என்று கூறினார்.

நடிகர் லிவிங்ஸ்டனின் கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விஜய்சேதுபதியின் அடுத்த அவதாரம்

கோலிவுட் திரையுலகில் இன்றைய தேதியில் அதிக திரைப்படங்களில் நடித்து வருபவரும், ஒவ்வொரு வருடமும் அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்வதும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மட்டுமே. இந்த பிசியான பணியிலும் அவர் அடுத்த அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்...

விஜய், சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி மிக வேகமாக நெருங்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் நடித்த 'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களால் ராசியான நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டார்...

'விவேகம்' படத்தின் அஜித் பஞ்ச் டயலாக் லீக்?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'வில் விஷால்-கார்த்தியுடன் இணையும் இன்னொரு தமிழ் ஹீரோ

கோலிவுட் திரையுலகில் இரண்டு முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பது என்பதே எப்போதாவது நடைபெறும் சம்பவமாக இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிப்பதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்...

'பாகுபலி' படக்குழுவினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் புதிய சாதனை செய்து வருகிறது