தண்ணீர் பாட்டில் ரூ.50க்கு விற்றால் எப்படி ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க! லிவிங்ஸ்டன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் எழில் இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் நாயகி ரெஜினாவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன், தற்போதைய திரையரங்கு நிலவரம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
'நான் எல்லா படங்களையும் தியேட்டரில் சென்றுதான் பார்ப்பேன். இதுவரை எந்த படத்தையும் டிவிடியில் பார்த்ததில்லை. ஆனால் அதே நேரத்தில் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் ரூ.1500 செலவு ஆகிறது. இது எப்படி எல்லோருக்கும் சாத்தியம் ஆகும்?
தியேட்டரில் ஒரு பப்ஸ் ரூ.80க்கும், ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் ரூ.50க்கும் விற்பனை செய்கின்றனர்.இப்படி இருந்தால் நடுத்தர வர்க்க மக்கள் எப்படி தியேட்டருக்கு வருவார்கள்? எனவே ரூ.400 அல்லது ரூ.500க்குள் ஒரு குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் அனைவருமே தியேட்டருக்கு படம் பார்ப்பார்கள். அனைத்து படங்களும் 70,80,90களில் ஓடியது போன்று 50 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடும்' என்று கூறினார்.
நடிகர் லிவிங்ஸ்டனின் கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout