இனி இந்த போன்களிலெல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது..!
- IndiaGlitz, [Friday,December 13 2019]
புது அப்டேட்டுகளுடன் பழைய இயங்குதளங்களை இணைத்து சேவைகளை வழங்க முடிவதில்லை என்பதால் சில போன்களில் இனி தங்களது சேவையை பெற முடியாது என் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 ஆண்டு முதல், ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது.
சமீபத்திய அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் 2020ம் ஆண்டு முதல் செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய அக்கௌன்ட்டை பயன்படுத்தவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 31ம் தேதி முதல் அனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்அப் சேவை செயல்படாது. அதேபோல் விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது.
அதேநேரம் KaiOS 2.5.1பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ்அப் சேவை தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.