உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப்? தீவிரவாதிகளின் கைவரிசையா?
- IndiaGlitz, [Friday,November 03 2017]
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தற்போது ஃபேஸ்புக் உரிமையாளரின் கையில் உள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென உலகின் பல நாடுகளில் வாட்ஸ் அப் சில மணி நேரங்கள் முடங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
முதலில் சென்னையில் மழை காரணமாக வாட்ஸ் அப் இயங்கவில்லை என்றுதான் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் உள்ள விவாதங்களை பார்க்கும்போது உலகின் பல நாடுகளில் வாட்ஸ் அப் செயலி இயங்கவில்லை என்று தெரிகிறது
குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர் , ஐரோப்பா, வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளில் வாட்ஸ் அப் செயல் இழந்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பல நகரங்களிலும் வாட்ஸ் அப் செயல்படவில்லை. இந்த நிலையில் இது தீவிரவாதிகள் அல்லது ஹேக்கர்களின் கைவரிசயாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வாட்ஸ் அப் நிர்வாகம் இதுகுறித்து எவ்வித விளக்கமும் கொடுக்காத நிலையில் தற்போது வாட்ஸ் அப் மீண்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.