Whatsapp- இல் தேவையில்லாத கால் வருதா? ஈஸியா தப்பிக்க எளிய வழி!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அளவில் மிகப்பெரிய சமூக ஊடகமாக மாறியிருக்கும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி அவ்வபோது சில மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. அதிலும் தேவையில்லாத எண்களில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு அதன் மூலம் டேட்டாவை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சமீபத்தில் வாட்ஸ்-அப் நிறுவனம் இதற்கு சிறந்த தீர்வினை அளித்திருக்கிறது.
2014 இல் துவங்கப்பட்ட வாட்ஸ்-அப் செயலியை ஸ்பேஸ் புக் நிறுவனர் Mark Zuckerberg கடந்த 2019 இல் 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். பின்னர் ஸ்பேஸ் புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் ஆகிய மூன்றையும் மெட்டா என்ற பெயரில் ஒருங்கிணைத்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வாட்ஸ்-அப்பில் புதிய சேவை ஒன்று தற்போது அறிமுகமாகி இருக்கிறது.
மற்ற நாடுகளைவிட இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகமாகி இருக்கிறது. இதைத்தவிர சமூக ஊடகங்களின் பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் வாட்ஸ்-அப் செயலியை மட்டும் 489 மில்லியன் இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதிவு செய்யப்படாத எண்களின் மூலமாக வாட்ஸ்-அப் செயலிக்கு அழைப்பு விடுத்து அதன் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் இந்தியாவிலும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வாட்ஸ்-அப் செயலியில் AI Machine Learning டெக்னாலஜியை பயன்படுத்தி பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்பை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதைப் பயன்படுத்த உங்கள் வாட்ஸ்-அப் செயலியை முதலில் அப்டேட் செயதுகொள்ளுங்கள். அடுத்து Whatsapp– இல் கொடுக்கப்பட்டு இருக்கும் Settings க்குள்ளே சென்று Privacy எனும் Option-ஐ க்ளிக் செய்து பின்னர் Calls என்ற Option-ஐ க்ளிக் செய்துகொள்ளுங்கள்.
அதில் Silence Unknown Callers என்ற Option- வரும். அதை டிக் செய்துகொண்டால் தேவையில்லாமல் வரும் வாட்ஸ்-அப் அழைப்புகளின்போது ரிங்க் டோன் வராது. இதனால தேவையில்லாத வாட்ஸ்-அப் கால் நமக்கு தெரியாமலேயே ஸ்லைன்ட்- ஆக வைக்கப்படும். ஆனால் Call history இல் அழைப்பு குறித்த விவரங்கள் தெரியும்.
இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் அப்படி வரும் அழைப்புகளை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கே இந்த Silence Unknown Callers பயன்படுகிறது. இந்த வசதி மூலம் பதிவுசெய்யப்படாத எண்களில் இருந்துவரும் அழைப்புகளை எளிதாகத் தவிர்க்கலாம்.
இதைத்தவிர வாட்ஸ்-அப் செயலியில் உங்களது தனியுரிமை குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள Privacy Checkup வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி உங்களது போனின் பாதுகாப்பை பற்றி நீங்களே சோதனை செய்து தெரிந்து கொள்ளலம்.
மேலும் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல்களை 15 நிமிடங்களுக்குள் எடிட்டிங் செய்து பின்னர் எடிட்டிங் தகவலை டேக் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் வாடஸ்-அப் உரையாடல்களில் நடக்கும் தவறுகளை எளிதாகச் சுட்டிக்காட்டவும் மேலும் விவரங்களை தெளிவாக புரிய வைக்கவும் முடியும்.
இதேபோல சமீபத்தில் வாட்ஸ்-அப் Windows பயனர்களுக்கு ஒரே நேரத்தில் 8 பேர் வீடியோ கால் செய்யும் வசதியும் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 32 பேருடன் ஆடியோ அழைப்பு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout