வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை! இருப்பினும் ஒரு சிறு ஆறுதல் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் 2018-2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஒருவிஷயம் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து மாற்றம் இருக்கும் என்பதுதான். ஆனால் இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது ஒரு ஏமாற்றமே.
இருப்பினும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒருசிறு ஆறுதலை அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். இதன்படி கடந்த 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான கழிவுத் திட்டத்தை மீண்டும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இந்த கழிவுத்திட்டத்தை கடந்த 2006ஆம் ஆண்டு அன்றைய நிதியமைச்சர்ப.சிதம்பரம் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
நிலையான கழிவுத்திட்டம் குறித்து ஒருசிறு விளக்கம்:
நிலையான கழிவு திட்டம் என்பது ஒருவரின் மொத்த வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் நமது உறவினர்களுக்கும், மருத்துவ செலவிற்கும் செய்த செலவை கணக்கு காட்ட அவசியமில்லை. இந்த வகையில் இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான கழிவுத்திட்டத்தின்படி வருடம் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வரை கணக்கு காட்டிக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள், கார்கள் வைத்திருப்போர் பெட்ரோல், டீசல் போட்ட கணக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்த கணக்கு ஆகியவையும் நிலையான கழிவுத்திட்டத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout