திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் குற்றமா? சென்னை ஐகோர்ட் கருத்து
- IndiaGlitz, [Saturday,December 07 2019]
கோவையை சேர்ந்த தனியார் விடுதி ஒன்றில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரு அறையில் தங்கி இருந்ததாக குற்றம் சாட்டி வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த விடுதியின் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் இன்று இது குறித்து கருத்து கூறிய சென்னை ஐகோர்ட், ‘ஒரு திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை என்றும், எனவே திருமணமாகாத இருவரும் அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியது
மேலும் லிவிங் டுகெதர் என்ற முறையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமில்லை என்று சட்டம் சொல்வது போல் ஒரே விடுதியில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவது குற்றமாகாது என்று தெளிவுபடுத்தியது.
இதனையடுத்து இந்த காரணத்திற்காக விடுதியை மூடியது சட்ட விதிமீறல் என்றும் உடனடியாக விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.