அடுத்த வருடம் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும்??? ஆருடம் சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த பொருளாதார மந்தத்தை விடவும் 2021 இல் அதீத மந்தநிலை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கோல்ட்ஸ்மேன் பொருளாதார வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். கொரோனா தடுப்புக்காக இந்தியாவில் மே 31 ஆம் தேதி ஊரடங்கு நீடிக்கப்பட்டு இருக்கிறது. சில விதிமுறைகள் மட்டும் தளர்த்தப் பட்டுள்ளன. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காட்டு தொகையை, நிவாரண திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளார். இந்தத் தொகையைக் கொண்டு இழந்துள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய முடியும் எனவும் எதிர்ப் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சையை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் பரபரப்பை கிளப்பி இருக்கின்றனர். கோல்ட்ஸ்மேன் பொருளாதார வல்லுநர்களாக ஆண்ட்ரூ டில்டன் மற்றும் பிராச்சி மிஸ்ரா ஆகிய இருவரும் இந்தியாவில் ஊரடங்கினால் ஏற்பட்ட மந்தநிலை அடுத்த ஆண்டுவரை தொடரும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த வல்லுநர்கள் கொரோனாவின் ஆரம்பத்தில் பொருளாதார வீழ்ச்சியில் 20 விழுக்காடு சரிவு இருக்கும் என அனுமானித்தனர். இந்நிலையில் இரண்டாவது காலாண்டில் வீழ்ச்சியின் அளவு 45 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது. மூன்றாவது காலாண்டில் இதில் 20 விழுக்காடாக குறைப்பதற்கு ஏதுவாக மத்திய அரசு நிதியை ஒதுக்கியிருக்கிறது. நான்காவது காலாண்டில் (அடுத்த ஆண்டின் துவக்கத்தில்) இந்த வீழ்ச்சியின் அளவு 14% மற்றும் 6.5% ஆக மாறாமல் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது மற்றம் நான்காவது காலாண்டுகளில் பெரிய அளவிற்கான மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கணிப்பினால் 2021 இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5 விழுக்காடு குறையும் எனவும் விஞ்ஞானிகள் தெளிவுப் படுத்துகின்றனர். இந்த அளவு குறைவான உள்நாட்டு உற்பத்தியினை இதுவரை இந்தியா சந்திக்க வில்லை. இந்த குறைந்த உள்நாட்டு உற்பத்தியினால், இதுவரை இந்தியா சந்திக்காத அளவில் கடும் மந்த நிலையை சந்திக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த எச்சரிக்கைக்கு நடுவில் கொரோனா பாதிப்பின் அளவும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout