இந்தியாவில் மே 17 க்குப் பிறகு என்ன நடக்கும்???

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

 

இந்தியாவில் நிலவும் சூழலைப் பொறுத்து இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு (மே 17) க்குப்பின் மீண்டும் தொடருவதற்கு வாய்ப்பு இல்லை என்று Economics Times செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும் அதன்படி சில புதிய விதிமுறைகளை கொண்ட பட்டியலை வெளியிடும் எனவும் அந்தச் செய்தி குறிப்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தளர்த்தப்படும் மத்திய அரசின் புதிய விதிமுறைகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிக பொறுப்பு அளிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும், மத்திய அரசின் புதிய விதிமுறைகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கப்படுவது குறித்து சில சட்ட வல்லுநர்கள் கவலைத் தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் சில இடங்களில் தேவையற்ற கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்த புதிய விதிமுறைகள் உதவியாக இருக்கும் எனவும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பொருளாதார நடவடிக்கைகளை தளர்த்துவதன் மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும் எனவும் கருதப்படுகிறது. மேலும், மத்திய அரசு உருவாக்க இருக்கும் புதிய விதிமுறைகளுக்கான பட்டியலில் எந்த நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகக் கூறப்படும் எனவும் அதிகார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன்படி மூத்த அதிகாரி ஒருவர் பொருள்களுக்கான விநியோகச் சங்கிலியை முழுமையாக தளர்த்த வேண்டும் எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் சந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் திறப்புக்கு தடை விதிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

பொது போக்குவரத்து குறிப்பிட்ட தூரங்களுக்கு முறையான பாதுகாப்போடு அனுமதிக்கப்படும் எனவும் தெரிகிறது. மேலும் விமான பயணங்களுக்கான அனுமதியும் கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பணியிடங்களிலும் வியாபார இடங்களிலும் 10 க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும். தொழிற்சாலைகளில் முறையான பாதுகாப்புடன் 40 நிமிட இடைவேளை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்கள், கடைகள், வியபாரத் தளங்களில் கிருமிநாசினிப் பொருட்களை வைக்க அரசு பரிந்துரைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வரவிருப்பதாகக் தெரிகிறது. .

More News

H-1B விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா அரசு முடிவு!!!

அமெரிக்காவில் கொரோனா பரவல் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

“கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியவில்லை”!!! வீட்டிற்குள் இருக்குமாறு மக்களை எச்சரித்த மகாராஷ்டிரா முதல்வர்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

டிசம்பர் வரை சம்பளம் இல்லாமல் நடிக்க போகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்

கொரோனா தொற்று காரணமாக கோலிவுட் திரையுலகில் அனைத்து படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடங்கியதால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகி உள்ளது.

'வாத்தி கம்மிங்' பாடல்: அனிருத் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா பரபரப்பு முடிந்த

'தேவர் மகன்' பாடலுக்கு மனைவி, குழந்தையுடன் நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.