ஆக்சிஜன் தட்டுப்பாடு கோவையில் இல்லை...! மருத்துவமனைகள் நிலவரம் என்ன..?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையில் இருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது.
பிற மாவட்டங்களைப் போலவே கோவையிலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மூச்சுத்திணறல் ஏற்படும் கொரோனா நோயாளிகளுக்கு, செயற்கை சுவாசம் அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் சில மாவட்டங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை போன்றவை இருந்துவருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் என்ன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கோவை அரசு மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டில் 917 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி தயார் செய்யப்பட்டிருந்தாலும், 50% படுக்கைகள் மட்டும் நிரம்பியுள்ளது. இங்கு தினசரி 5 கிலோ லிட்டர் மட்டுமே செயற்கை ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதாகவும், 13 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் இஎஸ்ஐ மருத்துவமனையில், கொரோனா வார்டில் 300 படுக்கைகள் இருந்தாலும், இவை அனைத்திலும் நோயாளிகள் நிரப்பப்பட்டுள்ளனர். இங்கிருக்கும் நோயாளிகளுக்காக தினசரி 3 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தற்போது 11 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள 40-திற்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு மொத்தம் 2986 படுக்கைகளும்,
அதில் சுமார் 777 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு 184 படுக்கைகள், அதாவது 67% நோயாளிகளுடன் நிரம்பியுள்ளது. இதில் 1184 படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், 593 படுக்கைகள் காலியாக உள்ளதால் மக்கள் பயப்படத்தேவையில்லை என தகவல்கள் கூறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com