ஆக்சிஜன் தட்டுப்பாடு கோவையில் இல்லை...! மருத்துவமனைகள் நிலவரம் என்ன..?

  • IndiaGlitz, [Saturday,April 24 2021]

கோவையில் இருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது.

பிற மாவட்டங்களைப் போலவே கோவையிலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மூச்சுத்திணறல் ஏற்படும் கொரோனா நோயாளிகளுக்கு, செயற்கை சுவாசம் அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் சில மாவட்டங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை போன்றவை இருந்துவருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் என்ன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கோவை அரசு மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டில் 917 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி தயார் செய்யப்பட்டிருந்தாலும், 50% படுக்கைகள் மட்டும் நிரம்பியுள்ளது. இங்கு தினசரி 5 கிலோ லிட்டர் மட்டுமே செயற்கை ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதாகவும், 13 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் இஎஸ்ஐ மருத்துவமனையில், கொரோனா வார்டில் 300 படுக்கைகள் இருந்தாலும், இவை அனைத்திலும் நோயாளிகள் நிரப்பப்பட்டுள்ளனர். இங்கிருக்கும் நோயாளிகளுக்காக தினசரி 3 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தற்போது 11 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள 40-திற்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு மொத்தம் 2986 படுக்கைகளும்,

அதில் சுமார் 777 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு 184 படுக்கைகள், அதாவது 67% நோயாளிகளுடன் நிரம்பியுள்ளது. இதில் 1184 படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், 593 படுக்கைகள் காலியாக உள்ளதால் மக்கள் பயப்படத்தேவையில்லை என தகவல்கள் கூறுகிறது.

More News

இளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேற்கு சுற்றுப்பயணம

தஞ்சை பெரியகோவிலைக் கட்டியது 30 அடி மனிதர்களா? ஆச்சர்யமூட்டும் ஆடியோ விளக்கம்!

சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை பறைச்சாற்றும் ஒரு பிரம்மாண்டம்தான் தஞ்சை பெரிய கோவில்.

சாலையில் கிடந்த தங்கநகை: காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளருக்கு வெகுமதி

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் கிடந்த ஒரு சவரன் தங்க நகையை J9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் ராணி என்பவரை சென்னை பெருநகர காவல்

எப்படி நம்ம குத்து: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட 'பிக்பாஸ்' பிரபலம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்'

'வலிமை' புதிய அப்டேட்: அஜித் ரசிகர்கள் அப்செட்

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் அப்டேட்டை ஒரு ஆண்டுக்கு மேலாக அஜித் ரசிகர்கள் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் முதல்வர், பிரதமர்