கொரோனா சிகிச்சையில் வென்டிலேட்டர்களின் பங்கு என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சைக்காக பல நாடுகள் வென்டிலேட்டர்களை இறக்குமதி செய்து வருகின்றன. உலகச் சுகாதார நிறுவனமும் இந்தக் கருவிகளின் கையிருப்பு குறித்து உலக நாடுகளை எச்சரித்து வருகிறது. இதனால் கொரோனா சிகிச்சையில் வென்டிலேட்டர்கள் அதிகப் பங்கு வகிக்கிறது எனத் தெரியவந்தாலும் கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் இந்த வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது கொரோனா சிகிச்சையில் இதன் பயன்பாடு என்ன என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளில் 80 விழுக்காட்டினருக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை. பொதுவாக 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே தீவிரச் சிகிச்சை தேவைப்படுகிறது. அந்த நபர்களிலும் சுவாசக் கோளாறு, புகைப்பழக்கம், இருதயநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதோடு உடலில் ஏற்கனவே நோயுள்ளவர்களின் சுவாச உறுப்புகள் பாதிப்படைந்திருக்கும். கொரோனா வைரஸ் கிருமியும் தன் பங்கிற்கு சுவாச உறுப்புகளை கடுமையாக பாதித்து அவர்களின் சுவாசத்தை சிதைக்கிறது. இத்தகையத் தருணங்களில்தான் வென்டிலேட்டர்களின் பயன்பாடும் அதிகமாகிறது.
ஆக, கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுவதில்லை. தீவிரச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர், ஏற்கனவே உடல் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மட்டுமே வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன. இயற்கையாக சுவாசிக்க முடியாத நேரங்களில் செயற்கை சுவாசங்கள் கொடுக்கப்பட்டு உடல் தேறிவருவதற்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த முறைகளில் அதிக அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.
இதைத் தவிர வேறொரு பிரச்சனைகளிலும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்து கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தும்போது நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு எதிராகப் போராடும். கொரோனா வைரஸ் சளி, இருமல், காய்ச்சலுக்கு அடுத்து பெரிய ஆபத்தைக் கொடுக்கிறது என்றால் அது நுரையீரல் பாதிப்பாகத்தான் இருக்கிறது. தீவிரச் சிகிச்சை தேவைப்படுகின்ற அனைவருக்கும் கொரோனா வைரஸ் சுவாசப் பிரச்சனைகளை கொடுத்து விடுகிறது. அப்படியான நேரத்தில் நமது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் வைரஸை எதிர்த்து போராடத் தொடங்குகிறது. அதாவது சுவாசப் பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்போது சுவாசிப்பதற்கு வசதியாக நமது சுவாசப் பாதையை மேலும் விரிவடைய செய்யும் பணியில் ஈடுபடுகிறது நமது நோய் எதிர்ப்பு மண்டலம். இப்படி விரிவடைய செய்வதற்கு அதிகபடியான நோய் எதிர்ப்பு சுரப்பிகளையும் சுரந்து விடுகிறது.
இதில் என்ன சிக்கல் என்றால் ஏற்கனவே சுவாசப் பாதைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது சுவாசப் பாதைகளில் நோய் எதிர்ப்பு மண்டலம் சுரப்பிகளை சுரந்து மேலும் நிலைமை மோசமாகிறது. இதனால் நுரையீரல் பாதைகளில் கட்டிகள் உண்டாகி வீக்கம் ஏற்படுகிறது. இந்த மாதிரியான நேரங்களில கொரோனா நோயாளிகளால் இயற்கையாக சுவாசிக்க முடியாது. எனவே வென்டிலேட்டர்கள் பொருத்தப்படுகின்றன. வென்டிலேட்டர்களில் ஈரப்பதமூட்டிகள் இருப்பதால் சுவாசப்பாதைகளில் இருக்கும் நீர்க்கட்டிகளை கரைப்பதிலும் உதவி செய்கிறது. சுவாசப் பாதைகளுக்குத் தேவையான வெப்பத்தை வெளிப்படுத்தும் தன்மையுடன் வென்டிலேட்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்முறைகளில் ஆக்சிஜனானது வால்வு வழியாக உயர் அழுத்தத்துடன் கொடுக்கப்பட வேண்டும். எனவே வென்டிலேட்டர்களை கையாள்வதற்கும் பணியாளர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வென்டிலேட்டர்களில் பல வகைகள் உண்டு. அதிலும் ஒரு வென்டிலேட்டர்களை கையாண்டவர்களுக்கு மற்ற வென்டிலேட்டர்களை கையாளத் தெரிவதில்லை. தவறான அணுகுமுறையில் வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு மரணமும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் வென்டிலேட்டர்களுக்கு அதிக பராமரிப்பும் தேவைப்படுகிறது. இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப் படுகின்றன.
மேலும், நோயின் தீவிரம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வயது குறைவு, உடலில் பலம் கொண்டவர்கள் என நோயாளிகளிலும் வித்தியாசம் உண்டு. குறைந்த பாதிப்புள்ளவர்களுக்கு வாய் வழி அல்லது நாசி வழி சுவாசம் செலுத்தப்படுகின்றன. இந்த முறைகளில் அடைக்கப்பட்ட ஆக்சிஜன் அவரது சுவாசத்தை சீர்ப்படுத்த உதவுகின்றன. வாயுக்கள் கலந்த மருந்துகளும் இந்த நேரத்தில் பல நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments