மோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு? பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
24 மணி நேரமும் பிசியாக இருந்த பலர் தற்போது அதே 24 மணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கின்றனர். வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
இந்த நிலையில் பொழுது போகாமல் இருக்கும் மக்களுக்கு ஒரு கேள்வியை டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்டிருக்கின்றார். அதாவது மலையாள நடிகர் மோகன்லாலுக்கும் ஜெமினி கணேசன் மகளும் இந்தி நடிகையுமான ரேகாவுக்கும் என்ன உறவு என்று? மோகன்லாலுக்கும் ரேகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கின்றார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அவருடைய முழு கேள்வியையும் படிக்க வேண்டும். அந்த முழு கேள்வி இதுதான்.
மலையாள நடிகர் மோகன்லால். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி. பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் ஒய்ஜி .மகேந்திரனோட அம்மா. ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண். அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி. விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன். நடிகர் ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா. இப்ப சொல்லுங்க மோகன்லாலுக்கும் ரேகாவுக்கும் என்ன உறவு என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொழுது போகாமல் இருப்பவர்கள் முயற்சித்து விடையை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.
மலையாள நடிகர் மோகன்லால். ??
— ஜெமினிகாந்த் ???? (@Mrthanikatchi) April 10, 2020
அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.??
பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee.மகேந்திரனோட அம்மா. ??
Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கைதான் லதா ரஜினிகாந்த். ??
லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
அவர் கணவர் தனுஷ்.??
லதா ரஜினியின் தம்பி ரவி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments