சிரியா போருக்கு யார் காரணம்? பின்னணி என்ன? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிரியாவில் ஆட்சி செய்யும் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த பல வருடங்களாக போர் புரிந்து வருகின்றனர். இந்த போரில் சமீபத்தில் கூட சுமார் 500 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதில் ஏராளமானோர் குழந்தைகளும் ஆவர். இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக சிரியா அரசு ரஷ்யாவின் உதவியுடன் தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வதாக ஒருசில அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் சிரியாவில் உண்மையில் என்ன நடக்கின்றது? இந்த போர் எதற்காக? இந்த போரின் பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்த ஒரு ஃபேஸ்புக் பதிவினை தற்போது பார்ப்போம்
ஒருவழியாக சிரியாவில் 4 வருடங்களுக்கு முன் துவங்கிய போரைப்பற்றி அது முடியும் தருவாயில் இருக்கும் போது பலர் கண்டு கொண்டு விட்டனர்.
மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, கத்தார், மஸ்கட், ஐக்கிய அமீரகம், பஹரைன், குவைத் என்று பல சர்வாதிகார , மனித உரிமைகளற்ற நாடுகள் அமைதியாக இருக்கும் போது சிரியாவில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினை ?
1.சிரியாவில் இயற்கை எரிவாயு/எண்ணெய் வளங்கள் ஏராளாமாக இருக்கிறது
2.சிரியா அதன் எண்ணெய் வளங்களை வெளி நாட்டு பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் அரசுடமை ஆக்கிக்கொண்டது
3.மற்ற பல வளைகுடா நாடுகளைப் போல் அமெரிக்க டாலரில் மட்டும் தான் கச்சா எண்ணெய்/எரிவாயு விற்பேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
4.அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்திலும் ,மற்ற நாட்டு கரன்சிகளிலும் வணிகம்/ஏற்றுமதி/இறக்குமதி செய்தது.
5.சவுதி அரேபியா ,கத்தார் போன்ற நாடுகள் மேற்கு ஐரோப்பாவுக்கு சிரியா வழியாக குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை
6.அப்படி குழாய் அமைத்தால் ஐரோப்பாவில் ரஷ்யாவின் எரிவாயு வியாபாரம் குறையும் அதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
7.சிரியாவில் ரஷ்யாவிற்கு படைத்தளம் இருக்கிறது. இதை எடுத்துவிட்டால் மத்திய கிழக்கு பகுதியில் ரஷ்யாவின் பலத்தை குறைக்கலாம்
8.ரஷ்யாவின் பல முக்கியமான கடல் வழி போக்குவரத்து சிரிய கடல் எல்லை வழியாகத்தான் நடக்கிறது.
9.சிரியாவின் கோலன் ஹைட்ஸ் எனும் பகுதியை இஸ்ரேல் நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது.இந்த பகுதியில் ஷேல் எரிவாயு வளம் அதிமாக இருக்கிறது.
10.சிரியாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் அதன் அண்டை நாடாக இருக்கும் ஈரானை ,ஈரானின் பரம வைரியான சவுதி அரேபியாவும் , அமெரிக்காவும் ராணுவ ரீதியாக சுற்றி வளைத்து விடலாம்.
11.பல வளைகுடா நாடுகளால் இருப்பது போல் சிரியாவில் 1400 வருடங்கள் பழமை வாய்ந்த, காட்டுமிராண்டித் தனமான ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லை.
12.சிரியா ஒரு மதசார்பற்ற நாடு
13.சிரிய அதிபர் பஷார் அல் அசாத் இஸ்லாமின் சன்னி பிரிவை சேர்ந்தவரல்ல , அலவைட் எனும் பிரிவை சேர்ந்தவர்.
14.சன்னி பிரிவை சேராத ஒருவர் நாட்டை ஆள்வது பல சன்னி இஸ்லாமிய நாடுகளுக்கும் , இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் பொறுக்கவில்லை.
மேலிருக்கும் காரணங்களால் தங்களுடைய திட்டங்களை சிரியாவில் செயல்படுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் அங்கு நிலைமையை சீர் குலைக்க ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி செய்து சிரியாவிற்குள் அனுப்பி அதிபர் அசாத்தை ஆட்சியிலிருந்து அகற்ற முயற்சி செய்தது. ஆனால் ராணுவ நடவடிக்கை மூலமாக ரஷ்யா மற்றும் சிரியா அதனை முறியடித்துக் கொண்டே வருவதால். CNN, BBC, Al JAZEERA போன்ற ஊடகங்கள் மூலம் ஆசாத் மட்டுமே வில்லன் என்பது போல் சித்தரித்து அதனால் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மூலாமாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி தீவிரவாதிகளின் கையை வலுப்பெறச் செய்யலாம் என்று செயல் படுகிறது.ஆனால் ரஷ்யா அங்கிருக்கும் வரை இது எதுவும் எடுபட போவதில்லை .
இன்னொரு சுவாரஸ்யமான விசயம்.. ரோமன் கத்தோலிக் தவிர கத்தோலிக்கர்களின் இன்னொரு பிரிவிற்கு சிரியன் கத்தோலிக் என்று பெயர்.. இதற்காக தனியாகஒரு போப்பரசர் சிரியாவில் இருக்கிறார்.. கேரளாவில் பரவலாக சிரியன் கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள்.. வெண்மைப்புரட்சியின் தந்தையான வர்க்கீஸ் குரியன் சிரியன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்.. இந்தியாவில் உள்ள வரையறுக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கத்தோலிக் சிரியன் வங்கி இச்சமூகத்தின் மூலதன திரட்சியில் உருவானது...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments