தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு இதுதான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களில் திரையுலக பிரபலங்களின் விவாகரத்து குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தன என்பதை பார்த்து வருகிறோம். சமந்தா, டி.இமான் ஆகியோர்களை அடுத்து தனுஷ் தனது துணையை பிரிவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபகாலமாக பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் விவாகரத்து அதிகமாகி உள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே கணவன், மனைவி 24 மணி நேரமும் இருப்பதாலும், வீட்டில் இருந்துகொண்டே பணிபுரிவதால் கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது மனம் விட்டு பேசவும் சண்டை போடவும் நேரம் இருக்காது. ஆனால் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவதால் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ளும் நிலை ஏற்படுவதாகவும் அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது மட்டுமன்றி அதிகம் சண்டை சச்சரவும் வருவதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒருபக்கம் அதிக அளவு பெண்கள் கர்ப்பம் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னொரு பக்கம் கருத்து வேறுபாடு காரணமாக அதிக அளவு விவாகரத்தும் இந்த ஊரடங்கு காலத்தில்தான் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாதிப்பு சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களுக்கும் பொருந்தும் என்பதும் பிரபலங்களும் தங்கள் துணையுடன் ஊரடங்கு நேரத்தில் அதிக அளவு நேரத்தை செலவிட்டதன் காரணமாக ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com