அஸ்வினி கொலை செய்யப்பட்டது ஏன்? சினிமாவை மிஞ்சும் திடுக்கிடும் திருப்பம்?
- IndiaGlitz, [Friday,March 09 2018]
இன்று மாலை சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரி அருகே அக்கல்லூரியில் பிகாம் படித்து வந்த அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இந்த நிலையில் இந்த கொலைக்கான காரணம் தற்போது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அஸ்வினி, அழகேசன் இருவரும் மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து பின்னர் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அஸ்வினியின் பெற்றோர்கள் இருவரையும் பிரித்து, அஸ்வினியை ஜாபர்கான் பேட்டையில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அஸ்வினியை மறக்க முடியாத அழகேசன், மீண்டும் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினி போலீஸில் புகார் செய்ய அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று சிறையில் இருந்து வெளியே வந்த அழகேசன், தன்னை சிறைக்கு அனுப்பிய அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்து பழி தீர்த்துள்ளார். தற்போது அழகேசன் பொதுமக்கள் தாக்கியதால் படுகாயம் அடைந்து நினைவிழந்துள்ளார். அவருக்கு நினைவு திரும்பியதும்தான் மேற்கண்ட தகவல்கள் உறுதி செய்யப்படும்.