ராஜமவுலி படங்கள் பிரம்மாண்டமாக இருப்பது எதனால்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் பிரம்மாண்டத்துக்குப் பெயர்போனவர் யார் என்று சொன்னால் சின்னக் குழந்தையும் சொல்லிவிடும் இயக்குனர் சங்கரின் பெயரை. அதே போல் தெலுங்கில் பிரம்மாண்டத்துக்கு பிரபலமானவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது திரைப்படங்கள் தமிழிலும் வெற்றிபெற்றுள்ளதால் தமிழகத்திலும் பிரபலம்.
தற்போது ராஜமவுலி தன் மூன்றாண்டு கடுமையான உழைப்பைக் கொடுத்து தமிழ்-தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கியிருக்கும் பாகுபலி படம் ஜூலை 10 அன்று உலகெங்கும் உள்ள 4000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராஜமவுலியின் அனைத்துப் படங்களிலும் பிரம்மாண்டம் மிளிரும். பாகுபலி போன்ற ராஜா காலத்துக் கதை என்றால் கேட்கவே வேண்டாம். அதற்கேற்றார்போல் `இந்தியாவின் மிகப் பெரிய அசையும் படம்` என்ற விளம்பரத்துடன் வெளியாகிறது பாகுபலி.
வியக்கவைக்கும் பிரம்மாண்டத்துடன் படங்களை இயக்குவதற்கான விதையை எங்கிருந்து பெற்றார் என்பதை விளக்கியிருக்கீறார் ராஜமவுலி.
சிறுவராக இருந்தபோது ராஜமவுலியின் தந்தை அவருக்கு ராஜா-ராணி கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார். ஒரே மூச்சில் படித்து முடித்துவிடும் அளவுக்கு அவற்றின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் ராஜமவுலி. அந்தக் கதைகளில் வரும் ராஜா, ராணி, இளவரசர்கள், எதிரிகள் உள்ளிட்ட பாத்திரங்களின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார். சூப்பர்மேன் பேட்மேன், அயர்ன்மேன். உள்ளிட்ட காமிக்ஸ் வகைக் கதைகளும் ராஜமவுலியை பெரிய அளவில் ஈர்த்திருக்கின்றன. அவற்றில் உள்ள ஓவியங்கள் அவரது மூளையில் திரைப்படங்கள் போல விரியுமாம்.
இதுபோன்ற குழந்தைப் பருவ அனுபவங்களையே தனது படங்களின் பிரம்மாண்டத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com