டிரைவரே இல்லாமல் சாலையில் ஒடிய கார்… மண்டையைப் பிய்த்துக் கொண்ட பயணிகள்!!! நடந்தது என்ன???

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

 

நமது தமிழகத்தின் எங்கோ ஒரு நெடுஞ்சாலையில் பழைய மாடல் கார் ஒன்று, டிரைவரே இல்லாமல் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. அந்தக் காரின் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் முன்பக்க சீட்டில் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். இப்படியே அந்தக் கார் மிக விரைவாக நெடுஞ்சாலையில் பயணிக்கிறது.

இதைப் பின்னால் இருந்து பார்த்த பயணிகள் வியந்தே போகின்றனர். எனவே அந்தக் காரைப் பின்தொடர்ந்து பார்க்கவும் முயற்சித்து இருக்கின்றனர். ஆனாலும் நடந்தது என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் அதை வீடியோவாக இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த இணையப் பதிவிற்கு பதிலளித்த சிலர் இது பழைய பீரிமியர் பத்மினி கார் என்றும் ஒருவேளை இது ஓட்டுநர் பயிற்சி வழங்கும் காராக இருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

பொதுவாக ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் கார்களில் டிரைவருடைய இருக்கையில் மட்டுமல்லாது முன்பக்க சீட்டிலும் கிளர்ச்சி, பிரேக் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் அந்த முன்பக்க இருக்கையில் ஸ்டீயரிங்க் மட்டும்தான் இருக்காது. ஆனால் ஓட்டுநருக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டே ஸ்டீரியரிங்கை எட்டிப்பிடித்து காரை மிகத் திறமையாக ஓட்டி விடுவர். அப்படித்தான் வீடியோவில் இருக்கும் காரும் சாலையில் ஓடியிருக்க முடியும் என ஒருவாறு இதை நமது நெட்டிசன்கள் கணித்து உள்ளனர்.