'சர்கார்' டைட்டிலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,June 21 2018]
தளபதி விஜய் நடித்து வரும் 62வது திரைப்படத்திற்கு 'சர்கார்' என்ற டைட்டில் சற்றுமுன் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த டைட்டில் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே 'சர்கார்' என்ற ஹேஷ்டாக் தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது
இந்த நிலையில் 'சர்கார்' என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விளக்கியுள்ளனர். SARKAR என்ற ஆறு ஆங்கில எழுத்துக்கு அர்த்தம் இதுதானாம். அதாவது சன்பிக்சர்ஸ் என்ற வார்த்தையின் முதல் எழுத்து, ஏ.ஆர்.முருகதாஸின் இரண்டு இனிஷியல்கள், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் முதல் எழுத்து மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு இனிஷியல் எழுத்துக்கள் ஆகியவைவே இந்த சர்கார் என்று விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
S = Sun Pictures
A R = AR Murugados
K = Kalanithi Maran
A R = A R Rahman
மேலும் ஃபர்ஸ்ட்லுக்கில் உள்ள விஜய்யின் லுக் மற்றும் ஸ்டைல் அட்டகாசமாக இருப்பதாகவும், படத்தின் டைட்டிலே இதுவொரு அரசியல் படம் என்பதை உறுதி செய்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.