'கங்குவா' என்றால் என்ன அர்த்தம்.. ஃபயரான விளக்கம் அளித்த சிறுத்தை சிவா..!
- IndiaGlitz, [Monday,April 17 2023]
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோ நேற்று வெளியானது என்பதும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் சிறுத்தை சிவா ’கங்குவா’ என்றால் என்ன அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.
சரித்திர கால கதையம்சம் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் ஆகிய இரண்டும் இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யாவின் லுக் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் கதை கங்குவான் என்ற கிராமத்தைச் சுற்றி வருகிறது என்றும் ’கங்குவா’ என்பது நாயகன் பெயர் என்றும் கங்கு என்றால் ஃபயர் என்றும் ’கங்குவா’ என்றால் 'பவர் ஆப் ஃபயர்’ என்று அர்த்தம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட முடிவு செய்திருப்பதால் அனைத்து மொழிகளுக்கும் ஒரு பொதுவான டைட்டிலை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த வலிமையான அர்த்தமுள்ள டைட்டிலை தேர்வு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சூர்யா படப்பிடிப்பில் மிகவும் மிகுந்த ஒத்துழைப்பு தருகிறார் என்றும் அவர் ஒரு மனிதநேயமிக்கவர் என்றும் அவருடன் பணிபுரிவது மிகவும் எளிமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திஷா பதானி இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார் என்று கூறிய சிறுத்தை சிவா முதல் முறையாக அவர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தது நிச்சயம் ஒரு ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் நேற்று வெளியான மோஷன் போஸ்டரில் உள்ள குதிரை, நாய் மற்றும் கழுகு ஆகிய ஆகியவைகளுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் பார்க்க நடைபெற்று வருகிறது என்றும் சிறுத்தை சிவா தெரிவித்தார்.