சிவகார்த்திகேயன் ரசிகர்களின் குழப்பத்திற்கு கிடைத்த விடை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹீரோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. ’மால்டோ கிட்டபுலே’ என்று தொடங்கும் இந்த பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில், ரோகேஷ் பாடல் வரிகளில் உருவானது என்பது தெரிந்ததே. ரோகேஷ் ஏற்கனவே எழுதிய ‘தங்கமாரி ஊதாரி’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.
இந்த நிலையில் இந்த பாடல் வட சென்னை பாஷையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் என்ற பாடலில் இடம்பெற்ற ‘மால்டோ கிட்டபுலே’ என்றால் என்ன அர்த்தம் என்பது குறித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஒருவன் வீரமாகவும் கெத்தாகவும் இருப்பதற்குப் பெயர்தான் ’மால்டோ கிட்டபுலே’ என்று படக்குழுவினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களீன் குழப்பம் தீர்ந்து இருக்கும் என்று நம்பலாம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout