இந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,January 22 2021]

இந்தியா மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளிலும் சல்யூட் வைக்கும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது. இது மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவர்களின் நம்பகத் தன்மையை சந்தேகப்படாமல் இருப்பதன் அடையாளமாகவும் வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் போலீஸ் துறை முதற்கொண்டு இராணுவம், விமானப்படை, கப்பற்படை என அனைத்துத் துறைகளிலும் இந்த சல்யூட் வைக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் போலீஸ் வைக்கும் சல்யூட்டிற்கும் மற்ற துறையைச் சார்ந்தவர்கள் வைக்கும் சல்யூட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. அதில் முப்படைகளில் ஒன்றான தரைப்படை (இராணுவம்) – வலது உள்ளங்கை முற்றிலும் வெளிப்புறம் தெரிவது மாதிரி விரித்து சல்யூட் வைக்கின்றனர். காரணம் ஒரு இராணுவ வீரர் மற்றொரு இராணுவ வீரரைப் பார்க்கும் போது தனது கையில் எந்த ஆயுதமும் இல்லை என தெரிவிக்கவாம். அதேபோல சல்யூட் வைக்கும்போது அவர்களின் நடுவிரல் நெற்றியை தொட்டுக் கொண்டோ அல்லது தொப்பியைத் தொட்டுக் கொண்டே இருக்குமாறு சல்யூட் வைக்கின்றனர். இது எதற்காக என்றால் தான் சந்திக்கிற அதிகாரி அல்லது இராணுவ வீரர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என வெளிப்படையாகக் கூறுவதற்கு இப்படி செய்கின்றனர்.

கப்பற்படை- பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள் பெரும்பாலும் கப்பலில்தான் பணியாற்றி உள்ளனர். அப்படி கப்பலில் பணியாற்றும்போது அவர்களின் கைகளில் கரை, அழுக்கு போன்றவை ஏற்படாமல் தடுப்பது மிகக் கடினம். இதனால் வேலைச் செய்து கொண்டு இருக்கும்போது உயர் அதிகாரி வந்தால் அவருக்கு தன்னுடைய கையில் இருக்கும் அழுக்கை மறைத்து சல்யூட் வைக்க வேண்டும் என நினைத்து உள்ளனர். அதாவது மரியாதை நிமித்தமாக கை அழுக்கை மறைத்து சல்யூட் வைப்பதுதான் கப்பற்படை சல்யூட். இவர்கள் ஜீரோ டிகிரியில் கையை தலைக்குப் பின்புறமாக சாய்த்து, தரையைப் பார்த்த மாதிரி சல்யூட் வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானப்படை – கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தரைப்படை வீரர்களும் இராணுவப்படை வீரர்களை போலவே சல்யூட் வைத்து இருக்கின்றனர். அதாவது உள்ளங்கை முழுவதும் வெளியே தெரிவது மாதிரி விரித்து சல்யூட் வைத்து உள்ளனர். பின்பு இந்த சல்யூட் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தற்போது விமானப்படை வீரர்கள் 48 டிகிரியில் வானத்தை நோக்கி கையை விரித்து சல்யூட் வைக்கின்றனர். காரணம் விமானப்படையின் விமானம் எப்போதும் பறக்கத் தயாராக இருக்கிறது என்பதை சொல்லும் நோக்கில் இப்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதைத்தவிர இறந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது, உயிரிழந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்துவது, குடியரசு தினம், சுதந்திரத்தினம், இராணுவ தினம், கப்பற்படை தினம், விமானப்படை தினம் என விழாக்கள் மற்றும் நடைமுறைகளுக்கும் பல வித்தியாசமான நடைமுறை பின்பற்றப் படுகிறது.

More News

சசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா, இம்மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது 

இதை மட்டும் செய்ய மாட்டேன்: ஸ்போர்ட்ஸ்மேன் மட்டுமல்ல ஜெண்டில்மேன் என நிரூபித்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்த நிலையில் கடைசியாக முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்று இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ் எப்போது?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

ஏன் இப்படி? பிக்பாஸ் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனில் மிகப்பெரிய புகழ் பெற்றார் என்பதும் அவருக்கு சமூக வலைதளங்களில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்: அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்!

தேர்தல் பிரச்சாரம் ஐந்து நாட்கள், பிக்பாஸ் படப்பிடிப்பு ஒரு நாள் என வாரத்தின் ஆறு நாட்களில் பிஸியாக கடந்த சில வாரங்களாக இயங்கி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.