தமிழ் தேசிய அரசியல்னா என்ன? : மோகன் ஜீ கேட்ட கேள்விக்கு நச் பதில் கொடுத்த சீமான்

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

தமிழர்களுக்காகவும், தமிழ் நிலத்திற்காகவும் பேசும் அரசியலே தமிழ் தேசிய அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நமது Indiaglitz சார்பாக உறவுகளுடன் சீமான் என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் காணொளி வாயிலாக பங்கேற்ற இயக்குனர் மோகன் ஜி, தமிழ் தேசியம் என்றால் என்ன? அதற்கான விதை எப்போது, யாரால் போடப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய சீமான் அவர்கள், இந்த தேசமே தமிழ் தேசம் தான். அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல் இந்த நிலப்பரப்பு முழுவதும் தமிழே தாய் மொழியாக கொண்ட நாகர்கள் தான் பரவி வாழ்ந்தார்கள். இந்த நாட்டை என் நாடு, என் சொந்தம் கொண்டாடிக் கொள்ள ஒரு இனத்திற்கு உரிமை உண்டு என்றால் அது தமிழர்களுக்கு மட்டுமே. இந்திய, திராவிட அரசியல் என்று வரும்போது பல்வேறு தமிழ் தலைவர்கள் இருந்துள்ளனர். ஐயா சி.பா. ஆதித்தனார், கலியபெருமாள், தமிழரசன் இவர்கள் வரும்போதுதான் நாட்டை தமிழ்நாடு என்கிறீர்கள் தேசம் தமிழ்தேசம் எனும் போது இங்கு வாழுகின்ற மக்களின் கலை, இலக்கிய, மொழி, பண்பாடு, வேலைவாய்ப்பு ,அவர்களுக்கான மருத்துவம், தொழில் வளர்ச்சி, பெண்ணிய உரிமை, காட்டு வளம், கனிம வளம், மலைவளம், நீர் வளம், கடல் வளம் இதையெல்லாம் காப்பதற்கான அரசியல் தமிழ்தேச அரசியல் அதுவே தமிழ் தேசிய அரசியல் என தெரிவித்துள்ளார்.