செல்வராகவனின் NGK-க்கு இத்தனை அர்த்தமா?
- IndiaGlitz, [Tuesday,March 06 2018]
ஒரு திரைப்படத்தை இயக்கி அதை பல கோணங்களில் யோசிக்க வைக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் படம் தான் யோசிக்க வைக்கும் என்றால் இவருடைய அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே ரொம்ப யோசிக்க வைக்கின்றது.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது. NGK என்ற டைட்டிலுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரை பார்த்தும் பலரும் பலவித கருத்தை கூறி வருகின்றனர்.
NGK என்றால் நந்த கோபாலன் குமரன் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர். ஆனால் மற்றவர்களோ செல்வராகவனின் டைட்டில் இவ்வாறு சாதாரணமாக இருக்காது இதற்கு வேறு அர்த்தம் இருக்கும் என்று கூறி வருகின்றனர்
NGK பர்ஸ்ட்லுக் போஸ்டரில் சூர்யா, சேகுவாரா கெட்டப்பில் இருப்பதால் இந்த படம் புரட்சி சம்பந்தமான படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் N என்றால் நெப்போலியன், G என்றால் குவேரா மற்றும் K என்றால் காரல் மார்க்ஸ் என்றும் யூகிக்கப்படுகிறது.
மேலும் மார்ச் 5ஆம் தேதிதான் சேவகுராவின் புகைப்படம் முதன்முதலில் வெளிவந்ததாம். அதே தேதியில் தான் இந்த ஃபர்ஸ்ட்லுக்கும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் செல்வராகவன் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அவருக்கு நெருக்கமானவர்களே கண்டுபிடிக்க முடியாது என்பதால் அவரே இந்த டைட்டிலுக்கு விளக்கம் தரும்வரை பொறுமை காப்போம்.