வாழ்க்கை குறித்து மிக எளிமையான விளக்கம் அளித்த விஜய்சேதுபதி
- IndiaGlitz, [Wednesday,February 28 2018]
திரையுலகில் எந்தவித பின்புலமும் இல்லாமல் பல்வேறு தோல்விகள் அவமானங்களை சந்தித்து, கடின உழைப்பின் மூலம் மட்டுமே முன்னேறிய ஒருசிலரில் விஜய்சேதுபதியும் ஒருவர். இந்த வயதிலேயே அவர் அறுபது வயதுக்குரிய அனுபவங்கள் பெற்று, வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக எளிமையாக அவர் பல மேடைகளில் விளக்கியுள்ளார். அவற்றில் ஒருசிலவற்றை இப்போது பார்ப்போம்
நான் பிகாம் படித்துள்ளேன். எனக்கும் கல்லூரியில் படிக்கும்போது பல ஆசைகள் கனவுகள் இருந்தது. நிறைய சம்பாதிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் என்ன செய்வது, எப்படி செய்வது, எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. இதுதான் ஒருவனுக்கு ஏற்படும் முதல் குழப்பம். அதேபோல் நம்முடன் இருப்பவர் ஒருவர் விரைவில் செட்டில் ஆகிவிடுவார். அதை பார்த்து நாமும் விரைவில் செட்டில் ஆகவேண்டும் என்று நினைப்போம்.
இந்த நிலையில் இவை இரண்டுமே படிக்கும் வயதில் தேவையற்றது. முதலில் மாணவர்கள் நன்றாக படியுங்கள், படித்து முடித்து இந்த உலகத்திற்கு வாருங்கள். நிறைய மோசமான அனுபவங்களை சந்திப்பீர்கள். வாழ்க்கை உங்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும். அந்த பாடத்தை கற்றுக்கொண்டால், வாழ்க்கையில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வீரகள்' என்று வாழ்க்கையின் தத்துவத்தை மிக எளிதாக சமீபத்தில் மாணவர்களிடையே பேசும்போது விஜய்சேதுபதி தெரிவித்தார்.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று பலர் அழுத்தம் கொடுப்பார்கள். அதுவொரு பெரிய காமெடி அதை நம்ப வேண்டாம். வாழ்க்கை என்பது சாதிப்பதோ, வெற்றி பெறுவதோ அல்ல, வாழ்வது. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.