படகில் போட்டோஷுட் நடத்திய நடிகை கைது… விமர்சனத்தால் விழிபிதுங்கும் சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் பிரபல சீரியல் நடிகை மற்றும் சோஷியல் மீடியா பிரபலம் ஒருவர் படகில் போட்டோஷுட் நடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் அந்த நடிகைக்கு பொதுமக்களிடம் இருந்து பல கடுமையான விமர்சனங்களும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிகை என்னதான் செய்துவிட்டார் என்பதுதான் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவில் திருமண விழாக்கள் முதற்கொண்டு குடும்ப விழாக்கள் வரை அனைத்தையும் போட்டோஷுட் எடுத்துவிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் சீரியல் மற்றும் சோஷியல் மீடியா பிரபலங்களிடம் இந்தப் பழக்கம் இன்னுமே அதிகரித்து விட்டது. இந்நிலையில் சில போட்டோஷுட்கள் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்து அது நீதிமன்ற வழக்கு வரை சென்ற சம்பவங்களும் கேரளாவில் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாக வலம்வருபவர் நடிகை நிமிஷா பிஜோ. இவர் தனது இன்னொரு நண்பரான உன்னி என்பவருடன் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு “பள்ளியோட்டம் போட்டோஷுட்” எனும் ஒரு போட்டோஷுட் நடத்தி இருக்கிறார். இதற்காக அவர் பாம்பு போல நீண்ட வடிவில் இருக்கும் கேரள கப்பலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு நீண்ட பாம்புவடிவில் கப்பல்கள் சொந்தமாக இருக்கும். இந்தக் கப்பல்களை விழாக்காலங்களில் பயன்படுத்துவர். சில நேரங்களில் இந்தக் கப்பல்களில் போட்டிகள்கூட நடக்கும். அப்படி அரன்முலா எனும் கோவிலுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில்தான் நடிகை நிமிஷா போட்டோஷுட் நடத்தியிருக்கிறார். இந்தக் கப்பல் பத்தினம் திட்டாவில் உள்ள பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படுமாம்.
இத்தனை பிரசித்திப் பெற்ற கப்பலை கேரள மக்கள் புதினப்பொருளாகவே கருதி வருகின்றனர். அரன்முலா கோவிலுக்கு மட்டும் இதுபோன்று 52 கப்பல்கள் சொந்தமாக உள்ளதாம். மேலும் இந்தக் கப்பலில் ஏற வேண்டும் என்றால் அதற்கென தனி பூஜை நடத்திவிட்டு கேரள வேட்டியையும் முண்டையும் அணிந்துகொண்டுதான் மக்கள் ஏறுவார்களாம். அதோடு இந்தப் பாம்பு கப்பலின் விலை ஒன்று தலா ரூ.1 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பலா மரத்தால் செய்யப்படும் இந்தக் கப்பலை மக்கள் கோவிலுக்கு சொந்தமான புனித இடத்தைப் போன்றுதான் மதிக்கின்றனர். இந்தக் கப்பலில் நடிகை நிமிஷா ஜீன்ஸ் மற்றும் ஷு அணிந்துகொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து நடிகை நிமிஷாவை பலரும் மோசமாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் கோவில் தேவஸ்தானம் நடிகை மீது புகார் அளித்த நிலையில் போலீசார் நடிகை நிமிஷாவை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை நிமிஷா இந்தக் கப்பலுக்கு இவ்வளவு புனிதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இதற்குமுன்பு நான் இதைக் கேள்விப்பட்டதும் இல்லை. நான் போட்டோஷுட் எடுக்கும்போது பலரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். என்னை யாரும் தடுக்கவில்லை. நான் தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் இந்தத் தவறு நடக்காது. எனக்கு ஜாமீன் கொடுங்கள் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments