தமிழர் பிரதமரானால் இந்தி பேசியே ஆகவேண்டுமா? சுஷ்மாவிடம் சசிதரூர் வாக்குவாதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், இதற்காக 40 கோடி ரூபாய் அல்ல, ரூ.400 கோடி செலவழிக்கக்கூட மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று மக்களவையில் பேசினார். சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றியதை சுஷ்மா நினைவுகூர்ந்த சுஷ்மா, ஐநா அவையில் இந்தியை அலுவல் மொழியாக்க பல நாடுகளின் ஆதரவு பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றியவர் என்ற முறையில் கருத்து கூறிய சசிதரூர், 'ஐநா அவையில் இந்தி அலுவல் மொழியாக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்றும், அந்த மொழி இந்தியாவில் அலுவல் மொழியாக மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்தியை எதிர்க்கும் தமிழகத்தில் இருந்து எதிர்காலத்தில் பிரதமர் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டால் அவர் இந்தி மொழியை பேசியே ஆகவேண்டும் என்ற சூழலை ஏன் ஆளாக்க வேண்டும் என்று கூறிய சசிதரூர், இந்தி பேசும் மக்களின் பெருமையை தான் புரிந்துகொள்வதாகவும், அதேநேரம், இந்தி பேசாத இந்நாட்டு மக்களும் இந்தியர் என்பதில் பெருமைகொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout