அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் என்ன செய்வேன்??? அதிபர் ட்ரம்ப்பின் தெறிக்கவிடும் பதில்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகையே கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிபர் தேர்தல் நடைபெறுவது பற்றிய எந்த தெளிவான அறிக்கைகளும் வெளிவராத நிலையில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியினருக்கு இடையே பெரிய வாக்குவாதங்கள், வார்த்தைப் போர்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. குடியரசு கட்சியின் வேட்பளாராக இப்போதைய அதிபர் ட்ரம்ப் நிற்கப் போகிறார். மேலும் நடைபெறபோகும் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்று அவர் அதிக சிரத்தை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை அதிபராக பதவி வகித்த ஜோ பிடன் வேட்பாளராக நிற்கிறார்.
தற்போது அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று கணிக்க முடியாத அளவில் உச்சத்தை எட்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இருவேறுபட்ட நெருக்கடியில் சிக்கி இருக்கும் அமெரிக்காவில் தற்போது அதிபர் ட்ரம்ப்பின் செல்வாக்கு சரிந்து வருவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்துக் கூறுகின்றனர். அதனால் வருகின்ற தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோல்வியைச் சந்திப்பார் என்று எதிர்க்கட்சிகள் உறுதியான விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் மற்றுமுள்ள அக்கட்சியின் முக்கிய ஆளுமைகள் அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான குற்றச்சாட்டுகளை அவ்வபோது வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜோ பிடன், ஒருவேளை ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து விட்டாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை விட்டு வெளியேற அடம்பிடிப்பார் என்றும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரை அதிகாரிகளைக் கொண்டே வெளியேற்ற வேண்டி வரும் எனவும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
ஜோ பிடன் விமர்சனத்தைக் குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதில் அளித்த ட்ரம்ப் “நான் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன். எனக்கு செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது. அதைப் பார்க்க போய்விடுவேன். ஆனால் நான் தோல்வியடைந்தால் இந்த நாட்டிற்கு அது பெரிய ஆபத்தாக முடியும்” எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இக்கருத்துகளைத் தொடர்ந்து தற்போது ட்ரம்ப்பின் மீதான விமர்சனங்கள் தற்போது மேலும் அதிகரித்து வருகின்றன.
அதிபர் ட்ரம்ப் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க மக்களிடையே ஒரு பெரிய எதிர்ப்பார்ப்போடு தேர்தலில் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரின் மதிப்பு அதிகரித்துக் காணப்பட்டதாகவே சொல்லப் படுகிறது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து அவரின் கருத்துகளும் நடவடிக்கைகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாகத் தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறது. அதோடு கறுப்பினத்தவர் அமெரிக்காவில் தொடர்ந்து அவமதிக்கப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் இவரின் செல்வாக்கை சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இணைய ஓட்டுகளில் முறைகேட்டில் ஈடுபடுவார்கள் என இருகட்சி வேட்பாளர்களும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments