யோகிபாபுவின் முதல் கனவுக்காதல் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,June 25 2019]

பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்த யோகிபாபு, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிப்பது போன்று நடித்திருப்பார். அந்த படத்தில் அவருக்கு ஒரு பாடலும் உண்டு. இந்த நிலையில் யோகிபாபுவுக்கு முதல்முறையாக கனவில் டூயட் பாடும் காதல் காட்சி ஒன்று 'கூர்கா' படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூர்கா' படத்தில் யோகிபாபு செக்யூரிட்டியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் வெளிநாட்டு தூதரகத்தில் பணிபுரியும் ஒரு வெள்ளைக்கார பெண்ணை பார்த்தவுடன் காதல் கொள்ளும் யோகிபாபுவுக்கு ஒரு கனவுப்பாட்டை வைத்துள்ளார் இயக்குனர். இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத, ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.

'கோலமாவு கோகிலா' படத்தின் பாடல் போல் இல்லாமல் இந்த பாடலில் வெளிநாட்டு பெண்ணாக நடித்துள்ள கனடா நாட்டின் நடிகை Elyssa Erhardt அவர்களுடன் யோகிபாபு கலர் கலராக உடையணிந்து டான்ஸ் ஆடியுள்ளதாகவும், இந்த டான்ஸ் 'மேட்டுக்குடி' படத்தில் நக்மாவுடன் கவுண்டமணி ஆடியது போன்று இருக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.

யோகிபாபு, ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார்.