நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் என்ன நடக்கும்???
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்கும் மின்விளக்கை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா அரக்கனை தடுக்கும் விதமாகவும் ஒற்றுமையை பலப்படுத்தும் விதமாகவும் இதை பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுதியுள்ளார். இப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைக்கும்போது, மின் பகிர்மானங்கள் பாதிக்கப்படும். பல மின் தொகுப்புகள் பழுதாகும் நிலைமையும் வரலாம். அதை சரிசெய்யவே சில வாரங்கள் ஆகலாம் எனவும் தற்போது அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மின் விளக்குகள் மட்டும் தான் வீடுகளில் அணைக்கப்படும். மற்றபடி டிவி, பிரிட்ஜ் போன்ற பொருட்கள் அப்படியே இருக்கும் என்பதால் பெரிய மாற்றங்கள் ஏற்படாது எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலர் அதிகாரிகள் மின் தொகுப்பில் உள்ள அதிவெண்கண் மாறும்போது நிலைமை சிக்கலுக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கின்றனர். இதுவரை இந்தியாவில் 49.0 Hertz முதல் 50.05 Hertz வரை மின்சாரம் மின்தொகுப்புகளின் வழியாக நாடு முழுவதும் பகிரப்பட்டு வருகிறது. இந்த அதிர்வெண்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மின்தேவை குறையும்போது அதன் உற்பத்தியை குறைந்த நேரத்திற்கு குறைத்தால் நிலைமை சரிசெய்யப்படும் எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும் இப்படி செய்வது சாத்தியமா என்பதே தற்போது உள்ள கேள்வி. தற்போது இந்தியாவிலுள்ள மின்தொகுப்புகள் 140 கிகா வாட் மின்சாரத்தை கடத்தும் திறனுடன் இயங்கிவருகின்றன. இதில் 10 விழுக்காடு குறைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்கப்படும் என தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.அக்ஷய் காந்தி தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த கட்டுப்படுத்தலுக்கு மின் ஊழியர்கள் முன்பே தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments