என்ன ஆச்சு யாஷிகாவுக்கு? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் உடலளவிலும் மனதளவிலும் போட்டியாளர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே போட்டியாளர்களின் உடல்நிலையும் வலுவிழந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு டாஸ்க்கின்போது விஜயலட்சுமி திடீரென மயக்கம் போட்ட நிலையில் சற்றுமுன் வந்த புரமோவில் யாஷிகா திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். உடனே பதறிய சக போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். பின்னர் எல்லோரும் யாஷிகாவை கன்பெக்ஷன் அறைக்கு அழைத்து செல்கின்றனர்.

இன்றைய டாஸ்க்கில் ஜனனியும் யாஷிகாவும் நீண்ட நேரம் வெயிலில் விளையாடியதால் உடலளவில் மிகுந்த சோர்வாகியிருந்ததால் யாஷிகாவுக்கு மயக்கம் வந்திருக்கலாம் அல்லது இதுவும் ஒரு யுக்தியாகவும் இருக்கலாம் என்ற வகையில் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.